» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை? தம்பியிடம் போலீசார் விசாரணை

ஞாயிறு 8, மார்ச் 2026 8:11:25 PM (IST)

தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக அவரது தம்பியைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி பாத்திமா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த பார்த்திபன் மகன் பாலன் (30). மீன்பிடித் தொழில் செய்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்லாமல் ஊதாரியாகச் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அப்பகுதிப் பெண்களைக் கேலி செய்ததாலும், குடும்பப் பொறுப்பு இல்லாததாலும் அவருக்கும் தம்பி டைசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இன்று பிற்பகல் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த டைசன், வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து அண்ணன் பாலனை உடல் முழுவதும் சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தென்பாகம் காவல்துறையினர், பாலனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டைசனை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே, உயிரிழந்த பாலனின் தாயார் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. "எனது மகன் பாலன் மனநலம் பாதிக்கப்பட்டவன். அவன் ஏற்கனவே ஒருமுறை தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றான். தற்போதும் அதேபோல் தனக்குத்தானே கழுத்தில் குத்திக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம்," என்று அவர் தெரிவித்துள்ளார். தாயாரின் இந்த வாக்குமூலம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலன் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்பத் தகராறில் தம்பியால் கொலை செய்யப்பட்டாரா? என்ற இரு வேறு கோணங்களில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory