» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: மதுரை நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், ஒன்பது போலீசாருக்கு எதிரான தீர்ப்பு வரும் மார்ச் 23-ஆம் தேதி வழங்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், கொடூரமாகத் தாக்கியதில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையை மதுரை உயர்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வந்தது. வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்தபோது பால்துரை என்ற சார்பு ஆய்வாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்டுள்ள 9 போலீசாரின் ஜாமீன் மனுக்கள் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று மாலை இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி முத்துகுமரன் தீர்ப்புக்கான தேதியை அறிவித்தார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:58:07 AM (IST)

வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:51:26 AM (IST)

சிவஞானபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
செவ்வாய் 3, மார்ச் 2026 10:21:30 AM (IST)

ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழாவில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 3, மார்ச் 2026 8:17:14 AM (IST)

தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:12:59 AM (IST)

பூனை குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:50:52 AM (IST)