» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெள்ள நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்: பெருங்குளம் பேரூராட்சித் தலைவர் கோரிக்கை!

திங்கள் 2, மார்ச் 2026 3:26:04 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள நிவாரண நிதியை விடுவிக்கக் கோரி, பேரூராட்சித் தலைவர் டாக்டர் எஸ். புவனேஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில், "கடந்த 2023 டிசம்பர் 19 அன்று ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மொத்தம் 105 நிவாரண வீடுகள் கட்ட பேரூராட்சிகளின் இயக்குநரிடமிருந்து 2024 மார்ச் மாதத்தில் ஆணை பெறப்பட்டது. இதுவரை 85 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ஜூன் 2025-ல் அரசிடமிருந்து பெறப்பட்ட ரூ.92,00,000/- பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

மேலும், திருநெல்வேலி மண்டல பேரூராட்சி உதவி இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, பெருங்குளம் பேரூராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.22,79,500/- வழங்கப்பட்டது. கட்டுமான நிலைக்கேற்ப பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள தவணைத் தொகை ஒரு கோடியே ஒன்பது லட்சம் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 

பேரூராட்சியின் பொது நிதியிலும் போதிய இருப்பு இல்லாத காரணத்தால், பயனாளிகளின் நலன் கருதி அரசு உடனடியாக இந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்று பேரூராட்சித் தலைவர் டாக்டர் எஸ். புவனேஸ்வரி  வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory