» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பஸ் - பைக் மோதல்: அனல் மின் நிலைய ஊழியர் பரிதாப பலி!

ஞாயிறு 1, மார்ச் 2026 11:05:07 AM (IST)

தூத்துக்குடி அருகே அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில், தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (26). இவர் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார். நேற்று முன் தினம் இரவு, சுப்புராஜ் தனது மோட்டார் சைக்கிளில் ஒட்டப்பிடாரத்திலிருந்து புதியம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

முப்பிலிவெட்டி அருகே அவர் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாகச் சிலர் திருச்செந்தூருக்குப் பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக சுப்புராஜ் தனது வாகனத்தைச் சற்றே விலக்கி ஓட்டியுள்ளார். அப்போது, தூத்துக்குடியிலிருந்து கப்பிகுளம் நோக்கி வந்த அரசு பேருந்து, எதிர்பாராத விதமாக சுப்புராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்புராஜ், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஒட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார், சுப்புராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அரசு பேருந்து ஓட்டுநரான தெற்கு பெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (53) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory