» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!

வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)

மாசி மாதப் பிறப்பு மற்றும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் பெருமாள் கோவிலில் மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு விஷ்ணுபதி புண்ணிய காலத்தை ஒட்டி, வைகுண்டபதி பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் "ராஜ அலங்காரத்தில்" எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இன்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பெருமாளை வழிபட்டனர்.

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை 27 முறை சுற்றி வந்து வழிபட்டால், வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஏராளமான பக்தர்கள் கோவிலை 27 முறை சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். மாசி மாதப் பிறப்பை ஒட்டி நடைபெற்ற இந்த வழிபாட்டில், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory