» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை சாலைகளைச் சீரமைக்க வேண்டும்: எம்.எல்.ஏவிடம் ஆலயக் குழுவினர் மனு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:12:04 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையைச் சுற்றியுள்ள சேதமடைந்த சாலைகளை, சித்திரை திருவிழாவிற்கு முன்பாக சீரமைக்கக் கோரி, சண்முகையா எம்.எல்.ஏ-விடம் வீரசக்கதேவி ஆலயக் குழுவினர் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் புகழுக்கு மகுடம் சூட்டும் வகையில், கடந்த 1974-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பாஞ்சாலங்குறிச்சி நினைவுக்கோட்டை கம்பீரமாக நிர்மாணிக்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம் தொகுதியின் பெருமைமிகு அடையாளமாக விளங்கும் இந்தக் கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள், தற்போது முறையான பராமரிப்பின்றி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வீரசக்கதேவி நுழைவு வாயில் பகுதி, நினைவுக்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள், அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தின் முன்புறப் பாதை, சுற்றுலாத் துறை பங்களா வரை செல்லும் சாலைபகுதிகளில் சாலைகள் சிதைந்து காணப்படுகின்றன.
இப்பகுதிகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகளும் வீரசக்கதேவி அம்மனைத் தரிசிக்க வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வருகிற மே மாதம் (சித்திரை கடைசி வெள்ளி மற்றும் சனி - 08.05.2026 & 09.05.2026) மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு அரசு விழாவும், அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவும் நடைபெறவுள்ளன. இவ்விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, திருவிழா நாட்களுக்கு முன்பாகவே தரமான புதிய சாலைகளை அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிகழ்வின் போது, பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழாக்குழுத் தலைவர் வலசை கண்ணன், தலைவர் வேலுச்சாமி, செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜப் பெருமாள், கௌரவத் தலைவர் வெயில்ராஜ், துணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார், பழனிச்செல்வம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வீரசங்கர், ஸ்ரீராம கட்டபொம்மு துரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







