» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீள நல்ல நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:32:33 PM (IST)

தூத்துக்குடி அருகே தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாகப் பிடித்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை அடுத்த நம்பிக்கை மீண்டான் கிராமம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இன்று இவரது வீட்டின் தோட்டத்தில் பாம்பு ஒன்று புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தோட்டத்தில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாகவமாகப் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்த துரித நடவடிக்கையைப் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







