» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை முயற்சி வழக்கில் பெண் உட்பட 3பேருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:17:02 AM (IST)
சொத்து பிரச்சனை காரணமாக உறவினரை கொலை செய்ய முயன்ற வழக்கில் பெண் உட்பட 3பேருக்கு தலா 4 வருடம் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (68/2026) என்பவரை கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அவரது உடன்பிறந்த சகோதரர் செந்தூர பாண்டி (77/26), அவரது மனைவி உத்தமி (68/26) மற்றும் மகன் சுரேஷ் (42/26) ஆகியோர்கள் சொத்து பிரச்சனை காரணமாக தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜகுமார் நேற்று (12.02.2026) செந்தூரப்பாண்டி சுரேஷ், மற்றும் உத்தமி ஆகியோரை குற்றவாளி என தீர்ப்பளித்து தலா 4 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ரூபாய் 1000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முருகன் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய காவல்துறையினரையும், அப்போதைய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஞானராஜ் மற்றும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேது ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







