» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை
வெள்ளி 13, பிப்ரவரி 2026 10:57:27 AM (IST)
சாத்தான்குளத்தில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மனைவி அழகு பார்வதி (28). இவர்களுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. அழகு பார்வதி தனது கணவர் மற்றும் மாமனார், மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 6-ம் தேதி, மாமியாருக்கும் அழகு பார்வதிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அழகு பார்வதி, தனது படுக்கை அறையில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாகப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அழகு பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்துச் சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அழகு பார்வதிக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் வருவாய் கோட்டாட்சியர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







