» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியரை கடித்த பாம்பு : விளாத்திகுளம் அருகே பரபரப்பு!
வியாழன் 12, பிப்ரவரி 2026 7:59:28 PM (IST)

விளாத்திகுளம் அருகே, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு ஊழியரைக் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராகப் பணியாற்றி வருபவர் மாரியப்பன். இன்று அவர் அலுவலகத்தில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜன்னல் ஓரத்தில் இருந்த பீரோவின் மேற்பகுதியிலிருந்து திடீரென ஒரு பாம்பு அவர் மீது விழுந்தது.
தற்காத்துக் கொள்ள முயன்ற மாரியப்பனின் வலது கை கட்டைவிரலில் அந்தப் பாம்பு பலமாக கடித்துவிட்டுத் தப்பியோடியது. இதில் நிலைகுலைந்த மாரியப்பன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார். அருகிலிருந்த சக ஊழியர்கள் மாரியப்பனை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் அலுவலக ஊழியர்கள், அலுவலக அறை முழுவதும் பாம்பைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் கடித்த பாம்பு பிடிபடவில்லை.
தமிழக முதலமைச்சரால் சில நாட்களுக்கு முன்புதான் காணொளிக் காட்சி வாயிலாக இந்தப் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கட்டிடத்திற்குள் பாம்பு புகுந்து ஊழியரைக் கடித்த சம்பவம் சக பணியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







