» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய்மை பணியாளர் தற்கொலை: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க கோரிய முன்னாள் பேரூராட்சி தலைவியின் மனு தள்ளுபடி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:57:49 PM (IST)
உடன்குடியில் தூய்மை பணியாளர் சுடலை மாடன் தற்கொலை வழக்கில் முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசியின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றவர் சுடலை மாடன் (56). இவரை பணிநிரந்தரம் செய்ய பேரூராட்சியின் முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி, செயல் அலுவலர் பாபு ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவதூறாக பேசியதாகவும் கூறி கடந்த 2023ஆம் ஆண்டு சுடலைமாடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி தங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பேரூராட்சியின் முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி, முன்னாள் செயல் அலுவலர் பாபு, தற்போதைய பேரூராட்சி தலைவர் ஹிமைரா ரமீஸ் பாத்திமா, பேரூராட்சி தலைவரின் கணவர் வார்டு கவுன்சிலர் அசாப் அலி பாதுஷா மற்றும் 3 நபர்கள் மீது மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட பிசிஆர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
அந்த வழக்கில் திருப்பமாக முன்னாள் உடன்குடி பேரூராட்சி தலைவர் ஆயிஷா கல்லாசி என்பவர் ஜாமீன் பெறும் போது ஒப்படைத்த தனது பாஸ்போர்ட்டை வெளிநாடு செல்வதற்காக திரும்ப கொடுக்க கோரி கடந்த பிப்ரவரி 6ம் தேதி தூத்துக்குடி மாவட்ட பிசிஆர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, அவர் கூறிய காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது, பாஸ்போர்ட்டை திரும்ப கொடுத்தால் தலைமறைவாக வாய்ப்புள்ளதால் வழக்கின் விசாரணையை பாதிக்கும், பாஸ்போர்ட்டை திரும்ப கொடுக்க முடியாது என்று ஆயிஷா கல்லாசி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







