» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 15,100 பேருக்கு சைக்கிள் வழங்கல் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:44:40 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 15100 பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளுக்கு மாணவ மாணவியர் சிரமமின்றி சென்று வர உதவியாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதரப்பிரிவைச் சார்ந்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் எவ்வித வருமான உச்சவரம்பின்றி ஆண்டுதோறும் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 2025- 26 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 137 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த 3168 மாணவர்கள், 4000 மாணவியர்களும், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 1544 மாணவர்கள், 2077 மாணவியர்களும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த 1848 மாணவர்கள், 2277 மாணவியர்களும், இதரப் பிரிவைச் சார்ந்த 72 மாணவர்களும், 114 மாணவியர்களும் என 6632 மாணவர்கள், 8468 மாணவியர்கள் என மொத்தம் 15100 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 15100 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரூ.6 கோடியே 82 இலட்சத்து 54 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் நிறைந்த மனதுடன் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







