» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு : திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:34:37 PM (IST)

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு, மாநிலத்தின் வளர்ச்சி தாரைவார்க்கப்பட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்தும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் 22 இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சகாயராஜ், சி.பி.எம். அர்ஜுனன், சி.பி.ஐ. கருப்பன், மதிமுக ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீராசா, விசிக விமல் வங்காளி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிதர் பிஸ்மி, சமத்துவ மக்கள் கழகம் அற்புதராஜ், மக்கள் நீதி மய்யம் ஜவஹர், மனிதநேய ஜனநாயகக் கட்சி யூசுப் ஆசராத், எஸ்டிபிஐ ஷேக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







