» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:14:48 PM (IST)

தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் அமைந்துள்ள சி.எம். மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பள்ளிச் செயலாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை ச. சங்கரேஸ்வரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 78 மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜீவன் ஜேக்கப், தி. ஆறுமுகம், தி. சோமநாதன், செந்தில் உட்படப் பலர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாகத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை கா. வள்ளியம்மாள் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







