» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி என்டிபிஎல் தொழிலாளர் மர்ம மரணம்: நுழைவு வாயில் முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

வியாழன் 12, பிப்ரவரி 2026 4:17:33 PM (IST)



தூத்துக்குடி என்டிபிஎல் நிறுவனத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரி அவரது உறவினர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி என்டிபிஎல் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராகப் பணியாற்றி வந்த சரவணன் என்பவர், பணி நேரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், இன்று காலை 10:30 மணியளவில் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு, சிஐடியு (CITU) தொழிற்சங்கம், திமுக தொழிற்சங்கம் (LPF) மற்றும் ஏராளமான சமூக ஆர்வலர்கள், பெண்கள் எனப் பெரும் திரளானோர் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயலாளரும், என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் கௌரவத் தலைவருமான  மா. மாரிச்செல்வம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். 

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் என்டிபிஎல் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்கவும், அவரது மனைவிக்குத் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கவும் நிர்வாகம் உறுதி அளித்தது. நிர்வாகத்தின் இந்த உறுதியைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory