» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: பிளஸ்-2 மாணவர் கைது

வியாழன் 12, பிப்ரவரி 2026 8:08:03 AM (IST)

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 17 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

கோவில்பட்டியில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்தனமாரி தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கோயில் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த சிறுவனை விசாரித்தபோது, அவன் போலீசாரைப் பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாகப் பேசியுள்ளான்.

இதையடுத்து அவனைச் சோதனையிட்டபோது, அவனிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அச்சிறுவன் பிளஸ்-2 படித்து வருவது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அச்சிறுவனை நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory