» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 4.97 கோடி!

வியாழன் 12, பிப்ரவரி 2026 7:59:49 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 4.97 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரு பணி நடைபெற்றது. இப்பணியினை கோயில் தக்கார் ரா. அருள்முருகன் தலைமை வகித்து பார்வையிட்டார். 

இதில், ரூ. 4,97,70,918 பணம், 1,071 கிராம் தங்கம், 31,811 கிராம்வெள்ளி, 2,40,880 கிராம் பித்தளை, 27,240 கிராம் செம்பு, வெளிநாட்டு கரன்சிகள் 1,296 இருந்தது. இப்பணி இணை ஆணையர் ராமு முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory