» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் ஷோரூமுக்குள் புகுந்த மரநாய் மீட்பு!

புதன் 11, பிப்ரவரி 2026 9:16:51 PM (IST)

சாத்தான்குளத்தில் உள்ள பைக் ஷோரூமுக்குள் புகுந்த மரநாயைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் - இட்டமொழி சாலையில் பைக் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஊழியர்கள் ஷோரூமைத் திறந்து பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த மரநாய் ஒன்று திடீரென ஷோரூமுக்குள் நுழைந்தது.

வனவிலங்கு உள்ளே புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், சாமர்த்தியமாகச் செயல்பட்டு அந்த மரநாயைச் ஷோரூமுக்குள்ளேயே வைத்துப் பூட்டினர். இது குறித்து உடனடியாக சாத்தான்குளம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஷோரூமுக்குள் பதுங்கியிருந்த மரநாயைத் தீயணைப்புத் துறையினர் லாவகமாகப் பிடித்துப் பாதுகாப்புப் பெட்டியில் அடைத்தனர்.

பின்னர், பிடிபட்ட மரநாய் அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பாதுகாப்பாக விடப்பட்டது. உரிய நேரத்தில் விரைந்து வந்து வனவிலங்கை மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory