» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாலுமாவடியில் மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
புதன் 11, பிப்ரவரி 2026 8:17:32 PM (IST)

நாலுமாவடியில் புதுவாழ்வு சங்கம் சார்பில் மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கம் சார்பில் நாலுமாவடியில் மகளிர் திறன் மேம்பாட்டுப பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்து பேசினார். ஆழ்வை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், அண்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயேசு விடுவிக்கிறார் சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் வரவேற்றார். தமிழ்நாடு மகளிர் சிறு குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் பயிற்சி முகாம் மற்றும் அதன் பயன்கள் குறித்து பேசினார்.
முகாமில் ஆழ்வை யூனியனுக்குட்பட்ட அங்கமங்கலம், புறையூர், புன்னக்காயல், ஆத்தூர், புறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் கிராமப்புற மகளிர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் காளான் வளர்ப்பு, மெழுகுவர்த்தி, கப் சாம்பிராணி, துணி பை, வயர்கூடை, பொம்மை, கேக், பிஸ்கட், ஆரி ஒர்க், தையல் உள்ளிட்ட பல்வேறு தொழில் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







