» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வாசல்களை 24 மணி நேரமும் திறக்க பா.ஜ.க இளைஞரணி கோரிக்கை!
புதன் 11, பிப்ரவரி 2026 5:48:15 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்க வேண்டும் என்று பா.ஜ.க இளைஞரணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சக்திவேல் தலைமையில், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் முன்னிலையில் நிர்வாகிகள் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது விவிடி சிக்னல் அருகிலுள்ள பிரதான வாசல் மட்டுமே 24 மணி நேரமும் செயல்படுகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் வருகை பாதிக்கப்படுகிறது. எனவே, திருச்செந்தூர் சாலை மற்றும் சுப்பையா முதலியார்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாசல்களையும் 24 மணி நேரமும் (அல்லது குறைந்தபட்சம் காலை 6 முதல் இரவு 9 மணி வரை) திறந்து வைக்க வேண்டும். மகப்பேறு பிரிவில் உள்ள மின்தூக்கி தடையின்றி இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவமனை வளாகம் முழுவதும் தரமான குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் முத்து பெரியநாயகம், வெள்ளத்தாய் அன்னராஜ், முகேஷ், ரமேஷ், பொன் விக்னேஷ் மற்றும் சமூக ஆர்வலர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







