» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடியிருப்பிற்குள் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பு மீட்பு
புதன் 11, பிப்ரவரி 2026 5:41:54 PM (IST)

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை, நடுக்கூட்டுடன் காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ச்சாமி. இவரது இல்லத்தின் நடுத் தெருவில் அமைந்துள்ள குடியிருப்பிற்குள் இன்று எதிர்பாராத விதமாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
வீட்டின் பின்புறம் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் ட்ரம்முக்கு அடியில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாகவமாகப் பிடித்தனர். பிடிபட்ட பாம்பைப் பாதுகாப்பாகச் சாக்குப்பையில் அடைத்த வீரர்கள், பின்னர் அதனை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விடுவித்தனர். தீயணைப்பு வீரர்களின் இந்தத் துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







