» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 24 இடங்களில் நாளை திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

புதன் 11, பிப்ரவரி 2026 11:26:10 AM (IST)

மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாளை (12-ம் தேதி) 24 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நாளை (12-ம் தேதி) 24 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கென எந்தப் புதிய திட்டங்களையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. கல்வி, ஜல் ஜீவன் மிஷன், 100 நாள் வேலைத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய சட்டப்படியான நிதியை இதுவரை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கான நிதியை வழங்கவில்லை; மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியை முறையாக விடுவிக்கவில்லை. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி தர மறுக்கின்றனர்.

இப்படியாகத் தமிழகத்தின் வளர்ச்சிக்கு விரோதமாகவும், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலும் செயல்படும் ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு 'ஒத்து ஊதும்' அடிமை அதிமுகவையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட மாநகர, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் அளவில் 24 இடங்களில் நாளை (12-ம் தேதி) மாலை 4 மணிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில/மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் கீதா ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory