» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை!

புதன் 11, பிப்ரவரி 2026 11:22:05 AM (IST)

தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறின் காரணமாக கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் நவநீத கிருஷ்ணன் (30), கூலித் தொழிலாளி. இவருக்கு நந்தினி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நவநீதகிருஷ்ணன் நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று இரவு வழக்கம்போல் ஏற்பட்ட தகராறினால் மனவேதனை அடைந்த நவநீதகிருஷ்ணன், தனது படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துத் தகவலறிந்த தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory