» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் மோதி ஒருவர் பலி: போலீசார் விசாரணை!
புதன் 11, பிப்ரவரி 2026 11:18:18 AM (IST)
மணியாச்சி - கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ரயில் மோதி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி - கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று மாலை சுமார் 5:45 மணியளவில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த நபருக்கு சுமார் 55 வயது இருக்கும். முகம் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரது வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்த தழும்பு உள்ளது. நீல நிற முழுக்கை சட்டை, காபி நிற அரைக்கால் சட்டை மற்றும் அதன் மேல் வெள்ளை நிற வேட்டி அணிந்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் எம். மகாகிருஷ்ணன் மற்றும் காவலர் செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது உயிரிழந்தவரின் உடல் அடையாளம் காண்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







