» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன் வரத்து குறைவு: வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள்!

புதன் 11, பிப்ரவரி 2026 11:06:23 AM (IST)



தூத்துக்குடியில் மீன் வரத்து கடுமையாகக் குறைந்துள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மொத்தம் 272 விசைப்படகுகள் சுழற்சி முறையில் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. வழக்கமாக அதிகாலை 5 மணிக்குக் கடலுக்குச் செல்லும் மீனவர்கள், இரவு 11 மணியளவில் கரை திரும்புவார்கள். இதன் மூலம் நாளொன்றுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் வரை மீன் ஏலம் நடைபெறும். கேரளாவிலிருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து மீன்களை வாங்கிச் செல்வார்கள். 

இத்தொழிலை நம்பி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் சுமார் 5,000 தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது கடலில் மீன்கள் வரத்து போதிய அளவில் இல்லாததால், மீனவர்கள் கடலுக்குச் செல்வது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக மீன் வரத்து மிகக் குறைவாக உள்ளதால், பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. தற்போது தினமும் 30 முதல் 50 படகுகள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றன.

இது குறித்து விசைப்படகு உரிமையாளர்கள் கூறுகையில், "ஒரு விசைப்படகு கடலுக்குச் சென்று வரச் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. மீன் வரத்து குறைந்ததால் டீசல் மற்றும் மீனவர்களுக்கான ஊதியத்தைக் கூட ஈட்ட முடிவதில்லை. நாள்தோறும் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்கப் படகுகளைத் துறைமுகத்திலேயே நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, அரசு உடனடியாக மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" எனத் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

மக்களின் மீனவ ஒருவன்Feb 11, 2026 - 12:08:39 PM | Posted IP 104.2*****

கோடி ரூபாய் செலவு செய்து படகு வாங்குவதை விட மீன், இறால் பண்ணை அமைத்து பாருங்கள் ஒன்னும் தெரியாத சோம்பேறிகளா.

ஏழை நலன்Feb 11, 2026 - 12:05:34 PM | Posted IP 104.2*****

கோடிக்கணக்கான பணத்துக்காக ஆசைப்பட்டு கடல் வளங்களை சுரண்டி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து விற்று விட்டார்கள். ஆனால் இயற்கையை பாதுகாக்கத் தெரியாது. முதல்ல ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுப்புவதை நிறுத்தி விடுங்கள். பொதுமக்களுக்கு கிடைக்காமல் பணக்கார வெளிநாட்டவர்களுக்கு அனுப்புவதா? அணைத்து பணத்தாசை பிடித்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுப்புவதை நிறுத்தி விடுங்கள் , பொதுமக்கள், ஏழைகள் பயன்பெறுவார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory