» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

புதன் 11, பிப்ரவரி 2026 11:02:35 AM (IST)

தூத்துக்குடியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி முத்து இசக்கி (42). இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் முத்து இசக்கி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவரது கணவர் மணி அவருக்குப் பல்வேறு ஆறுதல்களைக் கூறி தேற்றி வந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்து இசக்கி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்துத் தகவலறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory