» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் டிரைவரை மிரட்டி பணம், நகை பறிப்பு: 2பேர் கைது

புதன் 11, பிப்ரவரி 2026 8:29:33 AM (IST)

திருச்செந்தூரில் கார் டிரைவரை மிரட்டி பணம், தங்க மோதிரம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வழக்கில் இருவரைப் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து ஆறுமுகனேரிக்குச் செல்ல கடந்த 7-ஆம் தேதி, 4 பேர் வாடகைக் கார் ஒன்றை அழைத்துள்ளனர். காரைத் திருச்செந்தூர் சரவணப் பொய்கைச் சாலையைச் சேர்ந்த சங்கர் மகன் வேல்குமார் (55) ஓட்டிச் சென்றுள்ளார். ஆறுமுகனேரி சீனந்தோப்பு அருகே வரும்போது, அங்கிருந்த குடியிருப்புப் பாதை சாலையில் செல்லுமாறு சவாரிக்கு வந்தவர்கள் கூறியுள்ளனர். 

அதன்படி டிரைவர் காரை அங்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளார். அப்போது, காரை விட்டு இறங்கிய டிரைவரைப் பிடித்து மிரட்டிய கும்பல், அவரிடமிருந்த கைப்பேசி, ரூ. 5,000 ரொக்கம் மற்றும் 4 கிராம் தங்க மோதிரம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை உவரியில் மறைந்திருந்த குலசேகரபட்டினம் மேல மறக்குடித் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் கலையரசன் (23), கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்த குமார் மகன் முத்துக்குமார் (19) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 5,000 மற்றும் தங்க மோதிரம் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சஞ்சய் மற்றும் பகவதி ஆகிய இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory