» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசுப் பேருந்து மோதி 3 வயதுச் சிறுவன் பலி : திருவிழாவிற்கு வந்த போது சோகம்!

புதன் 11, பிப்ரவரி 2026 8:15:06 AM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு வந்த 3 வயதுச் சிறுவன், பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள கட்டாரங்குளத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரின் மகன் ராபின் (3). இவர்கள் புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்துள்ளனர்.  திருவிழா முடிந்து ஊர் திரும்புவதற்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, பின்நோக்கி வந்த அரசுப் பேருந்து சிறுவன் மீது மோதியது.

சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்துப் புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் முத்துவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory