» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மியான்மரில் சிக்கிய தூத்துக்குடி இளைஞர்கள் மீட்பு : துரை வைகோ எம்பிக்கு நன்றி!

புதன் 11, பிப்ரவரி 2026 8:05:15 AM (IST)



கம்போடியாவிற்கு வேலைக்குச் சென்ற இடத்தில் கடத்தப்பட்டு, மியான்மரில் சித்திரவதைக்குள்ளான 3 தமிழர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி பெரியசாமி நகரைச் சேர்ந்த சித்திரை செல்வகுமார், நவீன்குமார் மற்றும் விருதுநகர் சிப்பிப்பாறையைச் சேர்ந்த மதன்ராஜ் ஆகிய மூவரும் கடந்த 11.10.2025 அன்று வேலைக்காக கம்போடியா சென்றனர். அவர்கள் தாய்லாந்து வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு, தீவிரவாதக் குழுக்களால் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இது குறித்து துரை வைகோ எம்.பி.-யிடம் பெற்றோர்கள் முறையிட்டனர். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்தியத் தூதரகத்தின் தொடர் முயற்சியால் மூவரும் மீட்கப்பட்டனர். ஊர் திரும்பிய இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், துரை வைகோ எம்.பி.-யை நேரில் சந்தித்து தங்களது நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory