» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா கோலாகலமாகம்

புதன் 11, பிப்ரவரி 2026 8:01:26 AM (IST)



ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா கடந்த ஜன.29-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள் விழாவில், தினமும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி, மதுரை முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து புனிதரின் சப்பர பவனி நடைபெற்றது. பக்தர்கள் உப்புத் தூவி நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆலயப் பங்குத் தந்தை மோட்சராஜன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory