» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் 1½ கிலோ கஞ்சா பறிமுதல்: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:23:57 PM (IST)
கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் மீஹா தலைமையிலான போலீசார் இன்று பாரதி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோவில்பட்டியைச் சேர்ந்த பாலா (26) மற்றும் காளீஸ்வரன் (28) என்பதும், அவர்கள் விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்ததும் உறுதியானது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
எஸ்பி எச்சரிக்கை: "தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







