» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருவிழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைப்பு!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:18:44 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் தவித்த குழந்தையை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திருவிழா கூட்ட நெரிசலில் பக்தர் ஒருவரின் குழந்தை பெற்றோரை பிரிந்து தனியாக நின்று அழுதுகொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி மற்றும் போலீசார், அக்குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
உடனடியாக கோவில் வளாகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் குழந்தையை அழைத்துச் சென்று, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த பெற்றோரிடம் குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. மனிதாபிமானத்துடன் விரைந்து செயல்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







