» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதியவர் உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:49:38 PM (IST)
விளாத்திகுளம் அருகே இரு வேறு இடங்களில் குடும்பப் பிரச்சினை மற்றும் மதுப்பழக்கம் காரணமாக இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள க.குமராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமால் ரெட்டியார் மகன் வையணன் (90). இவர் கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மனவேதனையில் இருந்த வையணன் இன்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மற்றொரு சம்பவம்
விளாத்திகுளம் அருகேயுள்ள கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா மகன் முருகேசன் (36). கட்டிடத் தொழிலாளியான இவருக்குத் தீவிர குடிப்பழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் இவரது வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மதுப்பழக்கத்தால் விரக்தியடைந்த முருகேசன், அவ்வப்போது தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் குடும்பத்தினரை மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது வேட்டியால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த இந்த அடுத்தடுத்த தற்கொலைச் சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







