» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எல்லா பெண்களும் உயர்கல்வி பெற வேண்டும்: அமைச்சர் பி. கீதாஜீவன் பேச்சு!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:03:07 PM (IST)

தமிழகத்தில் எல்லா பெண்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற வகையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், அழிக்க முடியாத செல்வமான கல்வியை வழங்க வேண்டும் என்பதை இந்த திட்டத்தின் நோக்கம், தமிழகத்தில் பெண்கள் கல்வி பெறவேண்டும், எல்லா பெண்களும் உயர் கல்வி பெற வேண்டும் என்ற வகையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். பெண்கள் கல்வி அறிவு பெறுவதால் பல பெண்கள் தொழில் முனைவர்களாகவும் பலர் உருவாகி வருகின்றனர்.
தமிழகத்தில் புதுமைப்பெண் பெண் திட்டம் போன்று எல்லா திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கான ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவில் திட்டங்களை செயல்படுத்து வருகிறது. பெண் குழந்தைகளின் பாலின சமநிலையைப் பேணவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், உயர்கல்வியைக் கட்டாயமாக்கவும் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பத்தைத் தடுக்க, தூத்துக்குடியின் 56 பள்ளிகளில் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புதுமைப்பெண்' மற்றும் 'நான் முதல்வன்' போன்ற திட்டங்கள் மூலம், 2030-க்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நோக்கில் பெண்கள் தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டு வருகின்றனர் என்றார். இலவச தையல் இயந்திரங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட நிதி மற்றும் சிறுதொழில் புரிய மானியத்துடன் கூடிய இயந்திரங்கள் வழங்கப்பட்டன.'
மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் பேசுகையில், "உயர்வுக்குப் படி" போன்ற திட்டங்கள் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டதால், தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகளவிலான மாணவ-மாணவியர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் எனத் தெரிவித்தார். குறிப்பாக, 12-ஆம் வகுப்பு முடித்த பெண்களில் 96 சதவீதம் பேர் கல்லூரிகளில் இணைந்து சாதனை படைத்துள்ளனர் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







