» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் : 3 தாசில்தார்கள் உட்பட 122பேர் கைது!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 12:47:50 PM (IST)



தூத்துக்குடியில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 3 தாசில்தார்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடியில் 9 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்திற்குத் தாசில்தார்கள் ஞானராஜ், செல்வகுமார், சாமிநாதன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாலமுருகன், காளிராஜ், சந்திரசேகர், குமாரலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் முருகன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

முன்னாள் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், ஊரக வளர்ச்சித்துறை அன்புச்செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மகேந்திர பிரபு, சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் ஜெயபாக்கியம், உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலுமிருந்து திரளான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

அரசு ஊழியர்கள் அனைவரும் பேரணியாகப் புறப்பட்டு, பெரியார் சிலை முன்பாகச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 32 பெண்கள் உட்பட 90 பேரை மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்தத் தொடர் போராட்டத்தின் காரணமாக தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகப் பணிகள் இன்று ஓரளவிற்குப் பாதிக்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory