» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 29-வது ஆண்டு விழா: வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள்!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 10:49:58 AM (IST)



தூத்துக்குடி மில்லர்புரத்தில் அமைந்துள்ள பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 29-வது ஆண்டு விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அகிலன், ராலி இஞ்சினியரிங் நிர்வாக இயக்குநரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான அன்டோ ஆலன் ஆகியோர் கல்வி, விளையாட்டு மற்றும் இதர போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். மேலும், மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிறப்புரையாற்றினர்.

இந்த ஆண்டு விழாவிற்காக 'மகிழ்ச்சியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கை' எனும் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை விளக்கும் விதமாக மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பாடல்கள், நடனம் மற்றும் குறும்படங்கள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்குக் கண்ணுக்கு விருந்தாக அமைந்தன.

இந்த விழாவில் பிஎம்சி குழும இயக்குநர் சுபின் சுகுமார், பள்ளிகளின் தாளாளர் ஐ. ஜோசப் ஜான் கென்னடி, பள்ளியின் முதல்வர் ஜி. பால்கனி, துணை முதல்வர் ஜேன் மேத்யூ, துணை தலைமையாசிரியை பிரியா மற்றும் இதர பிஎம்சி பள்ளிகளின் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் முதல்வர் வரவேற்றார். நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் நன்றியுரை வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory