» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதியவருக்கு கத்திக்குத்து: மர்ம நபர்கள் வெறிச்செயல்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 10:41:40 AM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை, பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்திய இருவரைப் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி முத்து மகன் மைக்கேல் ராஜ் (65). இவர் கடந்த சில ஆண்டுகளாகத் தனது குடும்பத்தைப் பிரிந்து, தூத்துக்குடி ராஜாஜி பூங்கா பகுதியில் தங்கியிருந்து யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
நேற்று இரவு மைக்கேல் ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வாயில் அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், மைக்கேல் ராஜைத் தட்டியெழுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மைக்கேல் ராஜை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
படுகாயமடைந்த மைக்கேல் ராஜ் உடனடியாக அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனை வளாகத்திலேயே நள்ளிரவில் நடந்த இந்த கத்திக்குத்துச் சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







