» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளை பாதிக்கும் – கனிமொழி எம்.பி. பேட்டி!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:22:18 AM (IST)
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது : நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பில்லை: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும், ஆளும் கட்சியினரே பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசுவதற்குப் பயப்படும் சூழல் நிலவுவதாகக் கூறுகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார்.வெளிநாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் போது அது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும். ஆனால், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. டிரம்ப் அறிவித்த பிறகே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்கப்படும் பொருட்களுக்கு வரி ஏதும் இல்லாமலும், இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கு 18% வரி விதிக்கப்படுவதும் நியாயமற்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க வேளாண் பொருட்கள் இந்தியாவிற்குள் தடையின்றி வருவதால் இந்திய விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவை வேளாண் பொருட்களின் குப்பைத் தொட்டியாக மாற்றும் இந்த முயற்சியை தாம் தொடர்ந்து எதிர்த்து வருவதாகக் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
மக்கள் கருத்து
ஆம்Feb 10, 2026 - 07:13:05 PM | Posted IP 172.7*****
திருட்டு குடும்பம்
IndianFeb 10, 2026 - 09:49:40 AM | Posted IP 172.7*****
Except Tasmark, all things will destroy people.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)








இது காரணம்Feb 12, 2026 - 07:02:14 PM | Posted IP 162.1*****