» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த ரூ.16 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் - வாலிபர் கைது
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:06:14 AM (IST)
தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட பீடி இலைகளை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை சிறுப்பாடு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டனர். அச்சோதனையில், அந்த வாகனத்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 52 பண்டல் பீடி இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 16 லட்சம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சஞ்சய் குமார் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும், பீடி இலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த கடத்தலில் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரோந்து பணியின் போது துரிதமாகச் செயல்பட்டு, கடத்தல் கும்பலைப் பிடிதத்த புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசாரை, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் வெகுவாகப் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







