» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை முயற்சி: 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:55:31 AM (IST)

தூத்துக்குடியில் முயற்சி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 1997-ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர் (54), நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, கடந்த 2001-ஆம் ஆண்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அவருக்குப் பிடியாணை பிறப்பித்தது.

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், சார்பு ஆய்வாளர் முகிலரசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த சேகரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 25 வருடங்களாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்நை. சிலம்பரசன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory