» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழகம் சீர்கெட்டு இருக்கிறது: வேலூர் இப்ராகிம் பேட்டி
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:50:23 AM (IST)
கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா புழக்கத்தால் தமிழகம் சீர்கெட்டு இருக்கிறது என பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: "மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் தமிழகம் முன்னேறும் என்பதை வெளிப்படையாகச் சொல்லித் தொடர்ந்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க. ஸ்டாலின் எதையெல்லாம் சொன்னாரோ, அதையே வேறு வார்த்தைகளில் மறுபடியும் சொல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் செய்யாததை, இன்னும் இரண்டு மாதங்களில் முதல்வர் எப்படிச் செய்வார்? தூத்துக்குடியில் ரூ. 136 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வர மத்திய அரசு 60 சதவீத நிதி கொடுத்துள்ளது. ஆனால், ஏற்கனவே இருந்த மகப்பேறு மருத்துவமனையையே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுகிறார்கள்.
தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, மதுரை வழியாக ரயில் சென்னை செல்வதற்கு மத்திய அரசு நிதி கொடுத்தும், அதற்கான நிலத்தைத் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது; அது மும்மொழிக் கொள்கைதான். மாநிலத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதுவே மூன்றாவது மொழியாக இருக்கும்," என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







