» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானது: சபாநாயகர் பேட்டி!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:45:33 AM (IST)
தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானதாக இருக்கும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: "தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறித்துத் தெளிவாகப் பதில் சொல்லப்பட்டுள்ளது. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறு. அப்பணியைச் சரியாகச் செய்யாத காரணத்தால் ஐஏஎஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த அரசு யார் தவறு செய்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கும்.
விஜய் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்யும். எல்லா கட்சியிலும் அவரது ரசிகர்கள் இருப்பார்கள். அதற்காக அவர்கள் அனைவரும் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. தமிழக முதல்வர் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சாமானிய மக்களுக்காகச் சேவை செய்துள்ளார். மக்கள் நன்றியுடன் இருக்கிறார்கள்," என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







