» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளைஞர்களுக்கு திறன், வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:46:27 PM (IST)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உலகதர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலாதிறன் பயிற்சி (Global Food & Beverage Service Eco- Tourism), உயர்தொழில் நுட்ப AI பயிற்சி (Advanced Artificial Intelligence(AI)), ஆடை வடிவமைப்பு (ம) மேலாண்மை திறன்பயிற்சி (Apparel & Designing Management) மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் (Glam and Cosmetology Salon Management) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், உலகதர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி (Global Food & Beverage Service Eco- Tourism), உயர்தொழில் நுட்ப AI பயிற்சி (Advanced Artificial Intelligence (AI)), போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களாகவும் கல்விதகுதியாக பனிரெண்டாம் வகுப்புதேர்ச்சி பெற்றவராகவும், ஆடை வடிவமைப்பு (ம) மேலாண்மை திறன் பயிற்சி (Apparel & Designing Management) மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் பயிற்சி (Glam and Cosmetology Salon Management) போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களாகவும் கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







