» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒருங்கிணைந்த காப்பக கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப் பரிந்துரை - அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி

திங்கள் 9, பிப்ரவரி 2026 5:08:10 PM (IST)



தூத்துக்குடியில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து வகை பராமரிப்பு இல்லங்களின் கூட்டமைப்பு சார்பில், அமைச்சர் கீதா ஜீவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து வகை பராமரிப்பு இல்லங்களின் கூட்டமைப்பு சார்பில், 'ஒருங்கிணைந்த காப்பக கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் நீண்ட நாள் கோரிக்கையை சமூக நலன் - மகளிர் நலன் துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாடு அமைச்சரவை, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அரசாணை வெளியிடப் பரிந்துரைத்தமைக்காக தூத்துக்குடியில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் மெர்வின் ஜோசஸ், ஜூபின், பாலச்சந்திரன், ராதாகிருஷ்ணன், சாமுவேல் ஜெபசிங், ரகுராம், நிஜோ மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ராஜப்பா, சிவகுமார், மாலினி, செல்வகுமார், சோயா சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory