» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் ஊழியர்கள் 3 மணி நேரக் கடையடைப்புப் போராட்டம் : மதுப்பிரியர்கள் திண்டாட்டம்!

திங்கள் 9, பிப்ரவரி 2026 4:51:03 PM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் 3 மணி நேரக் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். 

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதிய முறையை ரத்து செய்து, அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறுபவர்களுக்கு முறையான ஓய்வூதியச் சலுகைகளை உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறன்றனர்.

கடந்த 5-ம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் இன்று கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. 

இதனால் தூத்துக்குடி மாவட்டத்திலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் 3 மணி நேரம் மூடப்பட்டிருந்தன. கடையடைப்பு பற்றி அறியாமல் பகல் 12 மணியளவில் வந்த மதுப்பிரியர்கள், கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். அவர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து, மதியம் 3 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்ட பின்னரே மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.


மக்கள் கருத்து

MakkalFeb 10, 2026 - 12:44:04 AM | Posted IP 104.2*****

Romba mukkiyam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory