» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : ஆட்சியர் நலதிட்ட உதவிகளை வழங்கினார்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:38:48 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (09.02.2026) நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 563 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
மாற்றுத்திறனாளி நல இயக்குநர், சென்னை அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்த தேசிய அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டு, இனிவரும் காலங்களில் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் UDID தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை வைத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் உதவிகள் அனைத்தும் பெற்று பயன்பெறலாம். அதனைத் தொடர்ந்து, இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறை களையும் கூட்டத்தில் 09 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமம், வாகைக்குளம் முகவரியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி மற்றும் கணவரால் கைவிடப்பட்ட .பா.வள்ளியம்மாள் என்பவருக்கு ஆவின் பாலகத்திற்கு வாடகை நிலுவை தொகையான ரூ.99,774/- யில் 50% தொகை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்தும், மீதமுள்ள 50% தொகை CSR நிதியிலிருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலமும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு, பிறகு ஆவின் மேலாளரிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ,இரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கல்யாணசுந்தரம், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் நாகராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரமநாயகம், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) ராகுல் வி.கோபால், மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







