» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தகுதியற்ற நிலையில் உள்ள அரசுப் பேருந்தை மாற்ற நடவடிக்கை : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:53:19 PM (IST)

ஆறுமுகமங்கலம் கிராமம் வழியாக இயக்கப்படும் தரமற்ற அரசுப் பேருந்தினை பயணிகளின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமம் வழியாக இயக்கப்படும் அரசுப் பேருந்தின் தரம் மிகவும் மோசமாக உள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக மாற்றுப் பேருந்து வழங்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தடம் எண் 548 கொண்ட அரசுப் பேருந்து மிகவும் சிதிலமடைந்த நிலையில் இயங்கி வருகிறது. பேருந்தின் உடற்பகுதி மற்றும் இன்ஜின் தரம் பயணத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. பேருந்தின் உள்ளே இருக்கும் இருக்கைகள் அனைத்தும் அமர முடியாத அளவிற்கு உடைந்து, பயணிகளுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
பேருந்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால், மழைக்காலங்களில் பேருந்திற்குள்ளேயே நீர் கசிந்து பயணிகள் நனைய வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. இப்பேருந்தில் தினமும் பள்ளிச் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பயணித்து வருகின்றனர். பேருந்தின் மோசமான நிலையால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலமாக இந்தப் பேருந்தின் தரத்தை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். தடம் எண் 548-ல் இயக்கப்படும் இந்த பழைய பேருந்தை நீக்கிவிட்டு, புதிய அல்லது நல்ல நிலையில் உள்ள மாற்றுப் பேருந்தை இந்த வழித்தடத்தில் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுகமங்கலம் கிராம மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)








உண்மFeb 9, 2026 - 06:22:49 PM | Posted IP 172.7*****