» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீனவ இளைஞர்களுக்கு கடற்படையில் சேர இலவசப் பயிற்சி: பிப்.15-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
திங்கள் 9, பிப்ரவரி 2026 12:27:30 PM (IST)
கடற்படை, கடலோர காவல்படையில் சேர மீனவர்களின் வாரிசுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்திய கடற்படை (மாலுமி) மற்றும் கடலோர காவல்படை (நேவிக்) போன்ற பாதுகாப்புத் துறைகளில் மீனவ இளைஞர்கள் சேர்வதற்காக தமிழ்நாடு அரசின் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் சிறப்புப் பயிற்சித் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தத் தீவிரப் பயிற்சி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,000/- உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 12-ஆம் வகுப்பில் இயற்பியல் (Physics) மற்றும் கணிதம் (Maths) பாடப்பிரிவுகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மீனவர் வாரிசுகளாக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து கடல் காவல் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய விரும்புவோர் https://drive.google.com/drive/folders/1xpDTbdGTUMvoJjcALOKw6lwiWHZ
mGj3b?usp=sharing என்ற கூகுள் டிரைவ் லிங்க்-ஐ தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.02.2026 ஆகும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அந்தந்தப் பகுதியில் உள்ள கடல் காவல் நிலையங்கள் அல்லது காவல் ஆய்வாளர் அலுவலகம், கடலோர பாதுகாப்பு குழுமம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் வழங்கலாம் என தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







