» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை : ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை!
திங்கள் 9, பிப்ரவரி 2026 12:12:48 PM (IST)

பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வசுவப்பனேரி, மீரான்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கருகிய பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், "கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாத காரணத்தினால், தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் குளங்கள் முழுமையாக நிரம்பவில்லை.
குறிப்பாக, வல்லகுளம், அரசர்குளம், பெருமால்குளம், மீரான்குளம், புதுக்குளம், வெட்டிகுளம், தேர்க்கன்குளம், கட்டாரிமங்கலம், அறிவான்மொழி பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. குளங்களில் தண்ணீர் இல்லாததால், வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் வேளாண் பயிர்கள் அனைத்தும் தற்போது வாடிய நிலையில் உள்ளன.
நிலைமை இதேபோல் நீடித்தால், பயிர்கள் முற்றிலும் அழிந்து விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்படும். ஆகையால் வேளாண் பயிர்களைக் காப்பாற்ற, மணிமுத்தாறு அணை 3-ஆவது ரீச் கால்வாய் வழியாக உடனடியாகத் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







