» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூதாட்டியிடம் நகை பறிப்பு: திருநங்கை உள்பட 2பேர் கைது
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:08:38 AM (IST)
குரும்பூர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவத்தில் திருநங்கை உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள நெடுங்கரை மேலத்தெருவைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மனைவி புனிதா (60). இவர், சம்பவத்தன்று மாலை சேதுசுப்பிரமணியபுரத்தில் உள்ள கடையில் காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். நெடுங்கரை விலக்கு பகுதியில் அவர் சென்றபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல நடித்து அவர் காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்கக் கம்மலைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த குரும்பூர் காவல் நிலையப் போலீஸார், தப்பியோடிய இருவரைத் தேடி வந்தனர். ஏரலை அடுத்த நட்டார் அம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த குமார் மகன் மாரிச்செல்வம் (18) என்பதும், தூத்துக்குடி மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த திருநங்கை சஹானா என்ற ரிதன்யா (19) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தங்க நகையைப் பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







